Washington State

Office of the Attorney General

Attorney General

Nick Brown

வெறுப்பினால் நிகழும் செயல்களைப் புகாரளிக்கவும் ஆதரவு சேவையைப் பெறுங்கள்.

இது உங்களுக்கு நடந்திருந்தாலும், அல்லது வேறொருவருக்கு நடந்திருந்தாலும், இதில் நீங்கள் தனியாக இல்லை: வெறுப்பு சம்பவங்களைப் பற்றி நீங்கள் புகாரளிப்பதற்காகவும், உங்களுக்குத் தேவையான ஆதரவு சேவையை வழங்குவதற்காகவும் இங்கு இருக்கிறோம்.

அவசரமற்ற-நிலை

Hate Crimes & Bias Incidents Hotline

மன அதிர்ச்சியைக் கையாளுவதில் பயிற்சி பெற்ற ஆபரேட்டர்களை திங்கள் - வெள்ளி, காலை 9 - மாலை 5 மணி வரை (பசிஃபிக்) தொடர்பு கொள்ளலாம்.

240-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பு கிடைக்கிறது.

அனைத்து ரிலே அழைப்புகளையும் நாங்கள் ஏற்கிறோம்.

ஆன்லைனில் எங்களிடம் எப்போது வேண்டுமானாலும் நீங்கள் புகாரளிக்கலாம்:

வெறுப்பு அடிப்படையிலான குற்றங்கள் மற்றும் பாகுபாடு தொடர்பான சம்பவங்களை புகாரளிக்கவும் (ஆங்கிலம்)

வெறுப்பினால் நிகழும் செயல்களைப் புகாரளிக்கவும் ஆதரவு சேவையைப் பெறுங்கள்.

மற்ற இடங்களைப் போலவே, வாஷிங்டனில் உள்ள சமூகங்களும் வெறுப்பு மற்றும் பாகுபாடு அடிப்படையிலான சம்பவங்களால் பாதிக்கப்படுகின்றன. 2018 முதல், அதிகமான வெறுப்புக்குற்றங்கள் புகாரளிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக வாஷிங்டன் இருந்துள்ளது என FBI (Federal Bureau of Investigation, புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம்) தெரிவித்துள்ளது. இத்தகைய சம்பவங்கள் மக்களை ஆழமாக பாதிக்கின்றன, அவர்களைப் பாதுகாப்பற்றதாகவோ அல்லது தங்கள் சமூகத்தில் விரும்பப்படாதவர்களாகவோ உணர வைக்கின்றன. வெறுப்பு அடிப்படையிலான குற்றங்களும் பாகுபாடு தொடர்பான சம்பவங்களும் எப்போதுமே புகாரளிக்கப்படுவதில்லை, எனவே அவை எவ்வளவு அடிக்கடி நடக்கின்றன என்பது குறித்த முழு தகவல்களும் நம்மிடம் இல்லை. வாஷிங்டன் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் வரவேற்கக்கூடிய வகையிலும், பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

Hate Crimes & Bias Incidents Hotline(வெறுப்பு அடிப்படையிலான குற்றங்கள் மற்றும் பாகுபாடு தொடர்பான சம்பவங்களுக்கான ஹாட்லைனில்), நீங்கள் வெறுப்பு தொடர்பான சம்பவங்களைப் புகாரளிக்கவும், தேவையான ஆதரவு சேவையைப் பெறவும் முடியும். இந்த ஹாட்லைன் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கவும், வெறுப்பு அடிப்படையிலான குற்றங்கள் மற்றும் பாகுபாடு தொடர்பான சம்பவங்களைக் கண்காணிக்கவும் உதவுகிறது. நாங்கள் செய்ய விரும்புவது:

  • வெறுப்பு அடிப்படையிலான குற்றங்கள் மற்றும் பாகுபாடு தொடர்பான சம்பவங்களால் பாதிக்கப்பட்டோர் அல்லது அவற்றைப் பார்த்தவர்களுக்கு ஆதரவளியுங்கள்.
  • உதவக்கூடிய சேவைகளை மக்களுக்குப் பரிந்துரைக்கவும். நாங்கள் காவல்துறையினர் அல்ல, மேலும் நீங்கள் சம்மதித்தால் மட்டுமே காவல்துறையிடம் புகாரளிப்போம்.
  • வாஷிங்டனின் சட்டமன்றம், ஆளுநர், சட்ட அமலாக்கம் மற்றும் சமூகத்தினருக்கு இந்தப் பிரச்சனையின் தீவிரத்தை தெரிவிக்கவும்.

இந்த ஹாட்லைன் அவசரமற்ற நிலைகளின் போது புகாரளிக்கும் எண் ஆகும். தற்போது ஏதாவது ஆபத்தான சம்பவம் நடைபெற்று கொண்டிருந்தால், தயவுசெய்து 911 ஐத் தொடர்புகொள்ளுங்கள்.

ஹாட்லைனில் என்ன நடைபெறுகிறது என்பதைப் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும். (ஆங்கிலம்)

வாஷிங்டனின் வெறுப்பு அடிப்படையிலான குற்றங்கள் மற்றும் பாகுபாடு தொடர்பான சம்பவங்களுக்கு எதிரான சட்டங்களின் வரலாறு

வாஷிங்டனில் கடந்த காலத்திலும், தற்போதும் நடைபெறும் வெறுப்பு அடிப்படையிலான குற்றங்கள் மற்றும் பாகுபாடு தொடர்பான சம்பவங்களுக்கு எதிரான சட்டங்களைப் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும். (ஆங்கிலம்)

நீங்கள் வெறுப்பு அடிப்படையிலான குற்றங்கள் மற்றும் பாகுபாடு தொடர்பான சம்பவத்தை எதிர்கொண்டுள்ளீர்களா அல்லது நேரில் பார்த்திருக்கிறீர்களா?

வாஷிங்டன் சட்டத்தின்படி, வெறுப்பு அடிப்படையிலான குற்றம் என்பது ஒரு நபரின் கருதப்படும் ஜாதி, நிறம், மதம், வம்சாவளி, தேசியம், பாலினம், பாலியல் ஈர்ப்பு, பாலியல் வெளிப்பாடு அல்லது அடையாளம், அல்லது மன, உடல், உணர்வு ரீதியிலான குறைபாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் அந்த நபரை தீங்கிழைக்க திட்டமிட்டும், திட்டமின்றியும் தாக்குதல் செய்வது அல்லது அவரது உடைமைகளை சேதப்படுத்துவது அல்லது அச்சுறுத்துவது ஆகும்.

  • இதில் பின்வருவன அடங்கும்: மற்றொரு நபரைத் தாக்குதல் அல்லது அவரது உடலில் காயம் ஏற்படுத்துதல்
  • உடைமைகளை சேதப்படுத்துதல்
  • மற்றொரு நபருக்கோ அல்லது ஒரு குழுவைச் சேர்ந்த மக்களையோ தாக்கி உடல்களில் காயத்தை ஏற்படுத்துதல் அல்லது உடைமைகளில் சேதத்தை ஏற்படுத்தி “குறிப்பிடத்தக்க பயத்தை” உருவாக்கும் வகையில் விடுக்கப்படும் மிரட்டல்கள்

வாஷிங்டன் சட்டத்தின்படி, பாகுபாடு தொடர்பான சம்பவம் , என்பது ஒருவரின் உண்மையான அல்லது கருதப்படும் ஜாதி, நிறம், மதம், மதநம்பிக்கை, வம்சாவளி, பூர்வீக நாடு, குடியுரிமை அல்லது குடியேற்ற நிலை, பாலினம், பாலியல் ஈர்ப்பு, பாலின வெளிப்பாடு அல்லது அடையாளம், மன, உடல் அல்லது உணர்வு ரீதியிலான குறைபாடுகள், பயிற்சி பெற்ற வழிகாட்டி நாய்கள் அல்லது சேவை விலங்குகளின் பயன்பாடு, அல்லது மரியாதையுடன் ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவத் துறை உறுப்பினர் அல்லது இராணுவ நிலையை அடிப்படையாகக் கொண்டு ஒருவர் மீது பகைமை அல்லது வெறுப்பை வெளிப்படுத்தும் செயல் ஆகும். இது வெறுப்பு அடிப்படையிலான குற்றங்கள் என்ற அளவிற்கு செல்லாத அளவில் நடைபெறும். பாகுபாடு தொடர்பான சம்பவங்களுக்கு சில உதாரணங்கள் (இவை மட்டுமல்ல):

  • ஒரு நபரின் உண்மையான அல்லது கருதப்படும் ஜாதி, பாலினம், மதம் அல்லது சட்டத்தால் பாதுகாக்கப்படும் பிற அடையாளங்களை அடிப்படையாகக் கொண்டு அவமானப்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்துதல்.
  • ஒரு நபரின் உண்மையான அல்லது கருதப்படும் ஜாதி, பாலினம், மதம் அல்லது சட்டத்தால் பாதுகாக்கப்படும் பிற அடையாளங்களை அடிப்படையாகக் கொண்டு அவமானப்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்துதல்.
  • ஒரு நபரின் குறைபாட்டை, அல்லது அவரது கலாச்சார நடைமுறைகள் மற்றும் பழக்கங்களை கேலி செய்தல்.
வெறுப்பு அடிப்படையிலான குற்றம் மற்றும் பாகுபாடு தொடர்பான சம்பவத்துக்கிடையிலான வித்தியாசங்களைப் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும் (ஆங்கிலம்)