Washington State

Office of the Attorney General

Attorney General

Nick Brown

ஆகஸ்ட்12, 2025

சியாட்டில் — மாகாணம் முழுவதிலும் வெறுப்பு அடிப்படையிலான குற்றங்கள் மற்றும் பாகுபாடு தொடர்பான சம்பவங்களுக்காக தொடர்புகொள்ளும் ஹாட்லைன் சேவையை மூன்று கவுண்டிகளில் சோதனை-திட்டமாக வாஷிங்டன் தொடங்கியுள்ளது. FBI (Federal Bureau of Investigation, புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம்)-இன் வெறுப்புக் குற்றப் புள்ளிவிவரங்களின்படி, 2018 முதல் அதிக வெறுப்புக் குற்றங்கள் பதிவான முதல் ஐந்து மாநிலங்களில் ஒன்றாக வாஷிங்டன் உள்ளது. அவசரநிலை இல்லாத ஹாட்லைன், கிளார்க், கிங் மற்றும் ஸ்போகேன் கவுண்டிகளில் உள்ள மக்களுக்கு வெறுப்பு அடிப்படையிலான குற்றங்கள் மற்றும் பாகுபாடு தொடர்பான சம்பவங்களைப் புகாரளிப்பதற்கான மாற்று வழியை வழங்குகிறது.

வெறுப்பு அடிப்படையிலான குற்றங்களும் பாகுபாடு தொடர்பான சம்பவங்களும் தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் மீது அழிவுகரமான, நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இது மக்கள் தங்கள் வாழ்விடங்களில் பாதுகாப்பற்றதாகவோ அல்லது வரவேற்பில்லாதவர்களாகவோ அவர்களை உணர வைக்கிறது. ஹாட்லைன் ஊழியர்கள் அழைப்பாளர்களுக்கு உள்ளூர், கலாச்சார ரீதியான தகுதிவாய்ந்த, பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்ட மற்றும் மன அதிர்ச்சியைக் கையாளுவதில் பயிற்சி பெற்ற ஆதரவு சேவைகளைக் கண்டறிய உதவுவார்கள். மேலும், அழைப்பாளரின் சம்மதத்துடன், உள்ளூர் சட்ட அமலாக்கத்திற்கு சம்பவங்களைப் புகாரளிப்பதற்கும் உதவ முடியும்.

1-855-225-1010 என்ற எண்ணிற்கு அழைப்பதன் மூலம் ஹாட்லைன் சேவையைப் பெறலாம். சோதனை நடைபெறும் மூன்று கவுண்டிகளில் வெறுப்புக் குற்றம் அல்லது பாகுபாடு அடிப்படையிலான சம்பவத்தைப் புகாரளிக்க விரும்புபவர்கள் atg.wa.gov/report-hate என்ற இணையதளத்தையும் பார்வையிடலாம்.

இரு தரப்பினரின் ஆதரவுடன் Legislature  (சட்டமன்றம்) 2024ஆம் ஆண்டு Senate Bill(செனட் மசோதா) 5427ஐ ஏற்றுக்கொண்டபோது, இந்த ஹாட்லைன் சேவை உருவாக்கப்பட்டது. இந்த மசோதாவில், Attorney General’s Office (அரசுத் தலைமை வழக்கறிஞர் அலுவலகம்) மூலம் நிர்வகிக்கப்படும் ஒரு ஹாட்லைன் சேவைத் திட்டத்தை வாஷிங்டன் மாகாணத்தின் மூன்று கவுண்டிகளில் அமல்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இதில் ஒரு கவுண்டி கிழக்கு வாஷிங்டனில் உள்ளது. 2023 ஆம் ஆண்டு Washington Association of Sheriffs, காவல்துறைத் தலைவர்களின் Annual Crime Report )வருடாந்திர குற்ற அறிக்கை( மற்றும் அந்த கவுண்டிகளின் மக்கள்தொகை விவரங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே அந்த மூன்று கவுண்டிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

சோதனைத் திட்டம் ஒன்றரை ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும், பின்னர் ஜனவரி 2027க்குள் ஹாட்லைன் முழு மாகாணத்திலும் தொடங்கப்படும். வெறுப்பு அடிப்படையிலான குற்றங்கள் மற்றும் பாகுபாடு தொடர்பான சம்பவங்கள் பெரும்பாலும் புகாரளிக்கப்படுவதில்லை, மேலும் அவை எவ்வளவு நிகழ்கின்றன என்பதற்கான தரவுகள் குறைவாகவே உள்ளன. ஜூலை 1, 2027 முதல், ஹாட்லைன் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு, வெறுப்பு அடிப்படையிலான குற்றங்கள் மற்றும் பாகுபாடு தொடர்பான சம்பவங்களைப் பற்றிய ஆண்டு அறிக்கையை ஆளுநர், மாநில Legislature மற்றும் பொதுமக்களுக்குக்காக Attorney General’s Office (அரசுத் தலைமை வழக்கறிஞர் அலுவலகம்) வெளியிடும்.

"வெறுப்பு அடிப்படையிலான குற்றங்கள் தனிநபர்களுக்கு நேரடியாக தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல், சமூகம் முழுவதும் தீங்கு விளைவிக்கும்" என்று அரசுத் தலைமை வழக்கறிஞர் Nick Brown தெரிவித்துள்ளார். “இந்த மூன்று கவுண்டிகளில் ஏற்படும் வெற்றி, ஹாட்லைன் சேவையை மாநிலம் முழுவதும் விரிவாக்குவதற்கும், வாஷிங்டன் முழுவதிலும் வெறுப்பு அடிப்படையிலான குற்றங்கள் மற்றும் பாகுபாடு தொடர்பான சம்பவங்களை எதிர்கொள்வதற்கான முறைகளை நன்கு புரிந்துகொள்வதற்கும் உதவும்.”

ஆலோசனை குழு உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள், ஹாட்லைன் சோதனைத் திட்டத்தை தொடங்குவது குறித்து கீழ்காணும் அறிக்கைகளை வழங்கினார்கள்:

2019ஆம் ஆண்டில் வெறுப்பு அடிப்படையிலான குற்றச் சட்டங்களில் மாற்றங்களை செய்து ஒரு முக்கியமான படியை எடுத்தோம் — ஆனால் வெறுப்பு அடிப்படையிலான குற்றங்கள் மற்றும் பாகுபாடு தொடர்பான சம்பவங்கள் அதிகரிப்பது, இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது என்பதைக் காட்டுகிறது,” என்று ஹாட்லைன் உருவாக்கும் மசோதாவை வழங்கிய D-சியாட்டில் மாகாண செனேட்டர் Javier Valdez தெரிவித்துள்ளார். “அதனால்தான் இந்த ஹாட்லைன் இத்தனை முக்கியமானதாக இருக்கின்றது. இது கொள்கையைப் பற்றியது மட்டுமல்ல - மக்களைப் பற்றியது. பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதையும், அவர்கள் ஆதரிக்கப்படுவதையும் உறுதி செய்வதற்காகவே இது அமைக்கப்பட்டுள்ளது.

“பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கெதிராக பகைமையுடன் செயல்படும் கூட்டாட்சி நிர்வாகம் வெறுப்பு மனப்பான்மையை ஊக்குவிக்கும் இந்த நேரத்தில், கிங் கவுண்டியில் உள்ள பலரும் பயத்துடனும், நிச்சயமற்ற நிலையிலும் வாழ்ந்து வருகின்றனர்," என்று கிங் கவுண்டி கவுன்சில் தலைவர் Girmay Zahilay தெரிவித்துள்ளார். “இந்த முயற்சியில் Attorney General’s Office உடன் சேர்ந்து செயல்படுவதில் எனக்கு பெருமையாக உள்ளது, மேலும் இதைத் தொடங்குவதற்காக பங்களித்த சமூகத் தலைவர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஒன்றாக, வெறுப்பு மனப்பான்மைக்கு எதிராக நாம் தொடர்ந்து ஒற்றுமையாக நிற்போம்.”

Hate Crimes & Bias Incidents Hotline (வெறுப்பு அடிப்படையிலான குற்றங்கள் மற்றும் பாகுபாடு தொடர்பான சம்பவங்களுக்கான) புதிய ஹாட்லைன் சேவையின் தொடக்கத்தை ஸ்போகேன் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது. சோதனைக்கான மூன்று இடங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெருமை அடைகிறது,” என்று ஸ்போகேன் மேயர் Lisa Brown தெரிவித்துள்ளார். எங்களுடைய Office of Civil Rights, Equity, and Inclusion (மனித உரிமைகள், சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கும் அலுவலகம்) இந்த முயற்சி உருவாகும் கட்டத்தில் Attorney General’s குழுவுடன் இணைந்து செயல்பட்டுள்ளது. இந்த ஹாட்லைனில் புகாரளிப்பதை மேம்படுத்தவும், எங்கள் சமூகத்தில் பொறுப்புணர்வை உறுதி செய்யவும் ஒரு முக்கிய கருவியாகும் என நாங்கள் நம்புகிறோம்.

Hate Crimes Hotline திட்டத்தை சோதனைத் திட்டமாக செயல்படுத்துவதன் மூலம் ஸ்போக்கேன் கவுண்டி முன்னோடியாக செயல்படுகிறது என்பதில் எனக்கு பெருமையாக உள்ளது,” என்று ஸ்போக்கேன் கவுண்டி கமிஷனர் Amber Waldref தெரிவித்துள்ளார் “இந்தக் கருவி, எங்கள் சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் பாதுகாப்பாகவும், பாதுகாப்பான சூழலில் வாழவும், சாத்தியமுள்ள வெறுப்பு அடிப்படையிலான குற்றங்களைப் பற்றி குடிமக்கள் புகாரளிக்க புதிய வாய்ப்பை உருவாக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.”

"வெறுப்பு அடிப்படையிலான குற்றங்களைப் புகாரளிப்பதில் மக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்கான ஒரு முக்கியமான படியாக இந்த ஹாட்லைன் உள்ளது" என்று கிளார்க் கவுண்டி ஷெரிப் John Horch தெரிவித்துள்ளார். "எங்கள் சமூகத்தில் உள்ள அனைவரும் தங்கள் குரலுக்கு மதிப்பு உள்ளது என்பதையும், தங்களுக்கு உதவி கிடைக்கிறது என்பதையும் அறிய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்."

ஆசியர்கள், ஹவாயை பூர்வீகமாகக் கொண்டவர்கள் மற்றும் பசிபிக் தீவு சமூகத்தினர் ஆகியோர் நூற்றாண்டுகளாகவே வெறுப்பு அடிப்படையிலான குற்றங்களை மற்றும் பாகுபாடு தொடர்பான சம்பவங்களை எதிர்கொண்டு வந்துள்ளனர், மேலும் கொரோனா பெருந்தொற்றின் உச்சக் கட்டத்தில் இவை இன்னும் அதிகரித்து இருந்தன," என்று HAPPEN Business Resource Group-இன் இணைத் தலைவரான Thanh Tran தெரிவித்துள்ளார். "இத்தகைய சம்பவங்கள் தினமும் நடைபெற்று வருகின்றன, ஆனால் ஊடக செய்திகளில் அவை குறைவாகவோ அல்லது குறிப்பிடப்படாமலோ உள்ளன. இந்த ஹாட்லைன், பாதிக்கப்பட்டவர்கள் இத்தகைய சம்பவங்களைத் தைரியமாக புகாரளிக்க ஊக்கப்படுத்தும் என்றும், அதன் மூலம் நமது சமூகத்திற்கு அதிகாரம் வழங்கி, நீதி மற்றும் மன அதிர்ச்சியிலிருந்து மீள்வதையும் நோக்கி முன்னேற முடியும் என்றும் நான் நம்புகிறேன்.”

இந்த ஹாட்லைன் மிகவும் முக்கியமானதாக உள்ளது, ஏனெனில் இது எங்கள் சமூகங்கள் நீண்ட நாட்களாகவே அறிந்திருக்கும் உண்மையை ஒப்புக்கொள்கிறது: வெறுப்பு என்பது உடலில் காயங்களை ஏற்படுத்துவது அல்லது உடைமைகளில் சேதம் ஏற்படுத்துவது போன்ற குறுகிய சட்ட வரையறைகளில் மட்டுமல்லாமல், அதைவிட பல்வேறு வடிவங்களிலும் இருக்கிறது,” என Washington Immigrant Solidarity Network நிர்வாக இயக்குநர் Catalina Velasquez தெரிவித்துள்ளார். எனது நெட்வொர்க்கில் உள்ள புலம்பெயர்ந்த குடும்பங்கள் வாய்மொழி துன்புறுத்தலுக்கு பயந்து, அவர்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பயப்படும்போது, பிற நிறத்தில் உள்ள திருநங்கைகள் தங்கள் மனித நேயத்தையே சிதைக்கும் அவமரியாதைகளை தினமும் எதிர்கொள்ளும் போது, “நீங்கள் வந்த இடத்துக்கு திரும்பிச் செல்லுங்கள்” என கேளிக்கு வயதானவர்கள் உள்ளாகும் போது — இவை அனைத்தும் நமது வாழ்வாதார நிலைமைகளையும், இந்த உலகத்தில் பாதுகாப்பாக வாழும் திறனையும் பாதிக்கும் வன்முறையின் வடிவங்களாகும். இந்த ஹாட்லைன், இந்த அனுபவங்களை பதிவு செய்யவும், நம்பவேண்டும் என்ற அடிப்படையில் அணுகவும், கலாச்சார உணர்வுடன் மற்றும் மனஅதிர்ச்சியை புரிந்துணரும் பராமரிப்புடன் பதிலளிக்கவுமான ஒரு வாய்ப்பை உருவாக்குகிறது.

“வெறுப்பின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது உள்ளூர் சமூகங்களில் தங்களுக்கு ஆதரவு இருக்கிறது என்பதை உணர வைக்க இந்த ஹாட்லைன் உதவும் என நான் எதிர்பார்க்கிறேன்,” என கூறினார் Human Rights Spokane குழுமத்தின் குழு உறுப்பினர் Hershel Zellman. “இந்த ஹாட்லைன் மூலம் சேகரிக்கப்படும் புள்ளிவிவரங்கள் கல்வி தொடர்பான திட்டங்களை உருவாக்கவும், வெறுப்பு தொடர்பான சம்பவங்கள் முதலில் ஏற்படாமல் தடுக்கும் வகையில் காவல் துறையின் நடவடிக்கைத் திட்டங்களை உருவாக்கவும் பயன்படுத்தப்படும் எனவும் நான் எதிர்பார்கிறேன்.”

இந்த ஹாட்லைன் சேவையானது, கலாச்சாரத்தை நன்கு புரிந்து கொண்ட ஆதரவை வழங்குவதற்கும், முஸ்லிம் சமூகத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும், மேலும் சம்பவங்களைப் பற்றி புகாரளிக்க பலரை ஊக்கப்படுத்தவும் உதவும் என நம்புகிறோம்,” என கூறினார் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள Council on American-Islamic Relations சட்ட வழக்கறிஞரான Sabrene Odeh. "இது இஸ்லாமிய வெறுப்பை நன்கு புரிந்துகொள்ளவும், எதிர்கால சமூகம் எதிர்கொள்ளும் திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளின் துல்லியத்தை மேம்படுத்தவும், எங்கள் சமூக உறுப்பினர்களுடன் எதிரொலிக்கும் ஆதரவை வழங்கவும் உதவும் என்று நம்புகிறோம். இந்த ஹாட்லைனை உருவாக்குவதிலும் செயல்படுத்துவதிலும் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் இடம்பெறுவது, முஸ்லிம்களின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்ததும் மதிக்கப்படுவதும் என்ற செய்தியை வலுப்படுத்துகிறது.”

நாங்கள் சேவை செய்யும் சமூகத்தின் நம்பிக்கையுள்ள தூதராக எங்கள் நிறுவனம் உள்ளது,” என்று வாஷிங்டன் Washington West African Center-இன் திட்ட இயக்குநர் Momodou Jobe தெரிவித்துள்ளார். “எங்கள் குரல் எங்கள் சமூகத்தின் கருத்துகளிலிருந்து வருகிறது, மேலும் ஹாட்லைன் உருவாக்கத்தில் எங்கள் பங்கேற்பு சமூகத்தின் குரலை அறைக்குள் கொண்டு வந்தது.”

அதிகமாகவும் வளர்ந்து வரும் யூத-எதிர்ப்பு தாக்கத்துடன் யூத சமுதாயத்தில் உள்ள பலரும் போராடி வருகின்றனர், மேலும் அதிக ஆதாரவளங்களும் சேவைகளும் அவசியமாக உள்ளன,” என்று பசிபிக் வடமேற்கு.பகுதியில் உள்ள Anti-Defamation League பிராந்திய இயக்குநர் Miri Cypers தெரிவித்துள்ளார். K-12 பள்ளிகளில் பாகுபாடு தொடர்பான சம்பவங்களில் போராடும் நம் இளம் மாணவர்களிடமிருந்து சமூக நிறுவனங்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களுக்குப் பொருத்தமான கலாச்சார உணர்வுடன் கூடிய ஆதரவை இந்த ஹாட்லைன் சேவை வழங்கும்.

அனைவருக்குமான நியாயமும் சமத்துவமும் தருவதில் சீக்கியர் சமூகமே உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது,” என்று Khalsa Gurmat Center செயல் இயக்குநர் Jasmit Singh தெரிவித்துள்ளார். பாகுபாடு அல்லது வெறுப்பை எதிர்கொண்டவர்கள் தங்களது கருத்துக்களைக் கேட்கவைக்கும் மற்றும் சம்பவங்கள் குறித்து பேசுவதற்கும் முக்கிய கருவியாக உள்ள இந்த ஹாட்லைன் சேவை ஏற்பாட்டை நாங்கள் பாராட்டுகிறோம். இந்த ஹாட்லைன் சமூகங்களுக்கு அதிகாரம் கொடுத்து, வாஷிங்டன் மாகாணத்தில் வெறுப்பு மனப்பான்மைக்கு இடமே இல்லை என்ற செய்தியையும் வலுப்படுத்துகிறது.” 

வாஷிங்டனின் வெறுப்பு அடிப்படையிலான குற்றங்கள் மற்றும் பாகுபாடு தொடர்பான சம்பவங்கள் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, இந்த இணையதளத்தைப் பார்வையிடவும் atg.wa.gov/report-hate.

வரையறைகள்

வாஷிங்டன் சட்டத்தின்படி, வெறுப்பு அடிப்படையிலான குற்றம் என்பது ஒரு நபரின் இனம், நிறம், மதம், வம்சாவளி, தேசிய அடையாளம், பாலினம், பாலியல் ஈர்ப்பு, பாலின வெளிப்பாடு அல்லது அடையாளம், அல்லது ஊனம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் தாக்குதல், சொத்து சேதம் அல்லது காயம் அல்லது சொத்து சேதத்தை ஏற்படுத்தும் அச்சுறுத்தல் போன்றவை ஆகும்.

பாகுபாடு தொடர்பான சம்பவங்கள் என்பது, குற்றமாக வகைப்படுத்தப்படாத செயல்கள் மற்றும் வன்முறை, அச்சுறுத்தல்கள் அல்லது சொத்து சேதம் ஆகியவற்றை உள்ளடக்காத தவறான முன்கணிப்புகளின் அடிப்படையிலான செயல்களாகும். பாகுபாடு தொடர்பான சம்பவங்கள் குற்றவியல் வழக்காகக் கருதி நடவடிக்கை எடுக்க முடியாதவையாக இருந்தாலும், அவற்றைப் புகாரளிப்பது அவசியானது ஆகும்.

-30-

 

வாஷிங்டனின் அட்டர்னி ஜெனரல் மக்களுக்கும் வாஷிங்டன் மாநிலத்திற்கும் சேவை செய்கிறார். மாகாணத்தின் மாபெரும் சட்ட நிறுவனமாக, Attorney General’s Office வாஷிங்டனில் உள்ள ஒவ்வொரு மாகாண அமைப்பு, வாரியம் மற்றும் ஆணையத்திற்குமான சட்டப் பிரதிநிதித்துவத்தை வழங்குகிறது. மேலும், இந்த அலுவலகம் நுகர்வோர் பாதுகாப்பு, மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் மக்களுக்கு நேரடியாக சேவை வழங்குகிறது. இந்த அலுவலகம் முதியோர் துஷ்பிரயோகம், மெடிகெய்டு மோசடி ஆகியவற்றுக்கு எதிராக வழக்குத் தொடரும் பணிகளைச் செய்கிறது, மேலும் வாஷிங்டன் மாகாணத்தின் 39 கவுண்டிகளில், 38-இல் பாலியல் வன்முறைக் குற்றவாளிகள் தொடர்பான வழக்குகளையும் கையாளுகிறது. மேலும் தகவல்களுக்கு www.atg.wa.govஐப் பார்வையிடவும்.

ஊடகத் தொடர்பு:

மின்னஞ்சல்:press@atg.wa.gov

தொலைபேசி எண்: (360) 753-2727

பொதுவான தொடர்புகள்: இங்கே கிளிக் செய்யவும் (ஆங்கிலம்)

ஊடக ஆதாரவளக் கையேடு மற்றும் Attorney General’s Office அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்